தொங்கும் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை பானம்.., எப்படி தயாரிப்பது?
Natural drink to support fat loss- பெரும்பாலோருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
உடல் எடையை அதிகரிக்க அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், உடல் எடையைக் குறைக்க உதவும் இயற்கை பானத்தை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- சோம்பு- 2 ஸ்பூன்
- சுக்கு- 2 ஸ்பூன்
- பட்டை- 2 துண்டுகள்
- கல் உப்பு- ½ ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- தேவையான அளவு
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு ஜாரில் வெந்தயம், சோம்பு, சுக்கு, பட்டை, கல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு இந்த பொடியை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இறுதியாக தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
எப்போது குடிக்கலாம்?
இந்த பானத்தை தினமும் மதிய உணவுக்கு முன்பு குடிக்கலாம்.
மேலும் உடல் எடையை கட்டுப்படுத்த தினசரி உடற்பயிற்சி, சமச்சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது முக்கியம்.
வெந்தயம், சோம்பு மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பானம் உடல் எடையைக் குறைக்க, செரிமானத்தை மேம்படுத்த மற்றும் வயிற்று உப்புசத்தை குறைக்க உதவும்.
மேலும் பட்டை, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் மற்றும் கல் உப்பு செரிமானத்திற்கு உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |