தொப்பையை குறைக்க உதவும் ஆரோக்கியமான பானங்கள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க
Natural Drinks To Reduce Belly Fat- இன்றைய காலகட்டத்தில் பலரும் தொப்பைப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, உடற்பயிற்சியின்மை, அதிக கலோரி கொண்ட உணவுகளைச் சாப்பிடுவது, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை தொப்பை ஏற்பட முக்கிய காரணங்களாகும்.
வயிற்றுப் பகுதியில் அதிகளவில் கொழுப்பு சேர்வது உடல் தோற்றத்தை பாதிப்பதோடு, நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும்.
எனவே, தொப்பையை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியைப் பின்பற்றுவது அவசியம்.
அந்தவகையில், தொப்பையைக் குறைக்க குடிக்கவேண்டிய 6 ஆரோக்கியமான பானங்கள் குறித்து பார்க்கலாம்.

சீரக தண்ணீர்- ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், செரிமானத்திற்கு உதவுவதோடு, வயிற்று உப்புசத்தையும் குறைக்க உதவும்.
இஞ்சி எலுமிச்சை நீர்- சிறிதளவு இஞ்சியை தட்டி கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், செரிமானத்திற்கு உதவுவதோடு, வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லையைக் குறைக்கவும் உதவும்.
க்ரீன் டீ- க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் பங்களிக்கின்றன.
சோம்பு நீர்- ஒரு டம்ளர் சூடான நீரில் சிறிதளவு சோம்பு சேர்த்து ஊற வைத்து, வடிகட்டி குடித்தால், செரிமானத்திற்கு உதவுவதோடு, வயிற்று உப்புசம் மற்றும் அசௌகரியத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
மஞ்சள் பால்- மஞ்சளில் குர்குமின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளை கொண்ட சேர்மம் உள்ளது. மஞ்சள் பால் உடலின் அழற்சியைக் கட்டுப்படுத்தவும், நல்ல தூக்கத்திற்கும் உதவக்கூடும்.
மோர்- மோர் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள புரதச்சத்து வயிறு நிறைந்த உணர்வைத் தரக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |