முக சுருக்கத்தை அகற்றி இளமையாக இருக்க உதவும் Facepack: வீட்டிலேயே தயாரிக்கலாம்
வயதானால் முகத்தில் சுருக்கம் விழுந்து இளமையை இழப்பது என்பது இயல்பான ஒன்று.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், முகத்தில் உள்ள சுருக்கத்தை அகற்றி இளமையாக இருக்க உதவும் இயற்கையான Facepack குறித்து பார்க்கலாம்.
1. எலுமிச்சை
எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து தோலில் தடவி 10-15 நிமிடங்களுக்கு பிறகு, தண்ணீரில் கழுவவும்.
அல்லது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் அரை ஸ்பூன் கிரீம் மற்றும் ஒரு ஸ்பூன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்க்கவும்.
அனைத்தையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
2. வாழைப்பழம்
மசித்த வாழைப்பழத்தை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இதில் உள்ள வைட்டமின் ஏ, கரும்புள்ளிகளை நீக்கி, வயதான அறிகுறிகளைத் தடுக்கிறது.
3. தேங்காய் பால்
தேங்காயைத் துருவி அதன் பால் எடுத்து உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பிறகு சூடான நீரில் கழுவவும்.
தேங்காயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் சருமத்தை பொலிவாகவும் மிருதுவாகவும் மாற்றும்.
4. பப்பாளி
பழுத்த பப்பாளியை நறுக்கி அதனை பேஸ்ட் செய்து கொள்ளவும்.
இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
பப்பாளியில் உள்ள பாப்பைன் என்சைம் சருமத்தின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை நீக்கி பொலிவாக மாற்றுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |