வயதானாலும் இளமையாக இருக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக வயது அதிகரித்து செல்லும்போது முகத்தில் சுருக்கம் விழுவது என்பது இயல்பான ஒன்று.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், வயதானாலும் இளமையாக இருக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- முல்தானி மெட்டி- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 5 ஸ்பூன்
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டியை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேக்கை வாரம் 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வர சருமத்தில் பொலிவை அதிகரிக்கும். மேலும், இளமைத் தன்மையும் மேம்படும்.
2. தேவையான பொருட்கள்
- முட்டை- 1
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அத்துடன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |