உடனடியாக முகப்பொலிவை அதிகரிக்க உதவும் Facepack.., எப்படி தயாரிப்பது?
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகப்பொலிவை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆட்டுப்பால்- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் தயிரை ஒரு துணியில் சேர்த்து முடிந்தவரை தண்ணீர் இல்லாத படி வடித்து கொள்ளவும்.
பின் அதனுடன் ஆட்டுப்பால், தேங்காய் எண்ணெய், மற்றும் தேனை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இதை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
பின்னர் இதை 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் தண்ணீரால் கழுவவும்.
இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, அதிக அளவு நீரேற்றத்துடன் வைக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |