முகத்தை உடனடியாக பொலிவாக்க உதவும் இயற்கை பேஷியல்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக, பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், முகத்தை உடனடியாக பொலிவாக்க உதவும் இயற்கை பேஷியலை வீட்டிலேயே எப்படி தயாரித்து பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

கடலை மாவு- கடலை மாவில் நீர் அல்லது பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் விட்டு கழுவவும். சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், அழுக்குகளை நீக்கி பொலிவு தரும்.
மஞ்சள்- மஞ்சள் தூளில் தேன், பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 5 நிமிடம் வைத்து கழுவவும். இது கருமையை குறைத்து முகத்தை பிரகாசமாக்கும்.
எலுமிச்சை- எலுமிச்சை சாறுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்து கழுவவும். இது இயற்கை ப்ளீச்சிங் தன்மை கொண்டது.
கற்றாழை- கற்றாழை ஜெல்லை நேரடியாக முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவவும். இது சருமத்திற்கு குளிர்ச்சி தரும், கரும்புள்ளி குறைக்கும்.
ஓட்ஸ்- ஓட்ஸ், தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் விட்டு கழுவவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |