உங்களுக்கு sensitive சருமமா? இதனை போக்க இதோ அற்புத டிப்ஸ்!
பொதுவாக நம்மில் பல பெண்களுக்கு சென்சிடிவ் சருமம் காணப்படும். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் அனைத்துப் பொருட்களையும் முகத்திற்கு பயன்படுத்த முடியாது
எதைப் பயன்படுத்தினாலும், சருமத்தில் அரிப்புக்கள், எரிச்சல் போன்றவை ஏற்பட்டு, இருக்கும் அழகும் போய்விடும். ஆகவே சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், தங்களின் அழகை அதிகரிக்க எந்த ஒரு பொருளை பயன்படுத்தும் முன்னும் பலமுறை யோசிக்க வேண்டும்.
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், தங்களின் சருமத்தை பளபளப்பாக வைத்து ஒரு சில இயற்கை பொருட்கள் பெரிதும் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
தேன் மற்றும் அவகேடோ
ஒரு டீஸ்பூன் தேன் எடுத்துக் கொண்டு ஒரு துண்டு அவகோடா கொண்டு செய்யப்படுவது தான் இந்த ஃபேஸ் மாஸ்க் ஆகும். அவகோடாவை குழைத்து மாவு போல உருவாக்கி பின் தேனுடன் சேர்க்க வேண்டும். கூடவே சிறிது ஆலிவ் ஆயிலை இணைத்துக் கொள்வது மிகுந்த பயனளிக்கக் கூடியது.
தேன் மற்றும் வெள்ளரிக்காய்
இரண்டு வெள்ளரிகளை எடுத்துக்கொண்டு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது பிளாக் டி எடுத்துக் கொள்ளவும்.வெள்ளரிக்காயை ஸ்லைசாக வெட்டிக்கொண்டு ஒரு கப் டீயில் போடுங்கள்.
அதனுடன் தேனையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். அதனை 15 நிமிடம் வேக வையுங்கள். இப்பொழுது அந்த வெள்ளரி துண்டுகளை எடுத்து உங்கள் தோலில் நீங்கள் தேய்த்தால் மென்மையாகவும் எரிச்சல் மிகவும் குறைந்து இருக்கும். இது உங்களுக்கு மிகுந்த பலனளிக்கக் கூடியது.
வாழைப்பழ மாஸ்க்
[7N14UI
]பாதி வாழைப்பழத்தினை எடுத்துக் கொண்டு அதனை நன்றாக குழைத்து கொள்ள வேண்டும். இரண்டு ஸ்பூன் அளவிற்கான ஓட்ஸ் எடுத்துக் கொண்டு அதனை வாழைப்பழத்துடன் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அதன் பிறகு அதில் கொஞ்சம் தேன் கலக்கவும் பின் அதன் கூட தேவைப்பட்டால் மட்டும் தயிரினை இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.