குதிகால் வெடிப்பை போக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்
Natural foot pack for cracked heels- குதிகால் வெடிப்பு என்பது சருமத்தில் ஈரப்பதம் குறைவதாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
வெடிப்பு லேசாக இருக்கும்போது வலியோ அசௌகரியமோ இருக்காது, ஆனால் அது தீவிரமடையும் போது கடுமையான வலி, அரிப்பு மற்றும் ரத்தப்போக்கு ஏற்படலாம்.
இது ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் தீவிரமான சரும வறட்சி, அதிக உடல் எடை, உடலில் நீர்ச்சத்து குறைபாடு, மற்றும் தவறான காலணிகளைத் தொடர்ந்து அணிவது.
அந்தவகையில், குதிகால் வெடிப்பை போக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.

1. தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்- 1
- தேன்- 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- ½ ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் வாழைப்பழத்தை நன்றாக மசித்து, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை குதிகால்களில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி, தேங்காய் எண்ணெய் தடவவும். தொடர்ந்து சாக்ஸ் அணிந்து கொள்ளலாம்.
2. தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- முல்தானி மெட்டி- 2 ஸ்பூன்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- ½
- பால்- தேவையான அளவு
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, முல்தானி மெட்டி மற்றும் அரிசி மாவை எடுத்துகொள்ளவும்.
அதில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு பால் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.

இதை குதிகால்களில் தடவி மெதுவாக ஸ்க்ரப் செய்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி, கால்களைத் துடைத்துவிட்டு மாய்ஸ்சுரைசர் தடவவும். இதை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |