நிரந்தரமாக நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை ஹேர் டை: எப்படி தயாரிப்பது?
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், வீட்டிலேயே நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை ஹேர் டை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொய்யா இலை- 5
- சங்கு பூ- 15
- டீ தூள்- 1½ ஸ்பூன்
- செம்பருத்தி பொடி- 1½ ஸ்பூன்
- மருதாணி- 2 கைப்பிடி
- எலுமிச்சை- ½
- அவுரி இலை பொடி- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் கொய்யா இலை, டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
பின் இதில் செம்பருத்தி பொடி, சங்கு பூ சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அனைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மருதாணி இலை சேர்த்து அதில் வடிகட்டி வைத்த தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் இரும்பு வாணல் வைத்து அதில் அரைத்த மருதாணி இலை, எலுமிச்சை சேர்த்து கலந்து மூடி போட்டு ஒரு நாள் முழுவதும் அப்படியே வைக்கவும்.
இதற்கடுத்து இதில் அவுரி இலை பொடி சேர்த்து கலந்து முடியில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவிக்கொள்ளலாம்.
இதனை, தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி மறைந்து முடி முழுவதும் கருமையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |