நரைமுடியை கருமையாக மாற்ற இந்த ஒரு ஹேர்பேக் போதும்: எப்படி பயன்படுத்துவது?
ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
நரைமுடியை இயற்கையான முறையில் கருப்பாக மாற்ற இந்த காபி ஹேர்பேக் பயனுள்ளதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- காபித்தூள் - 2 ஸ்பூன்
- நெல்லிக்காய் தூள் - 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஒரு சிறிய கிண்ணத்தில் காபித்தூள், நெல்லிக்காய் பொடி எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இவை இரண்டும் சேர்ந்து பேஸ்ட் போல் குழைக்க தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
பிறகு மெல்லிய துணியில் அதை வடிகட்டி கொண்டால் பேஸ்ட் தயார்.
கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளிக்க முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தலை அனைத்திலும் இவற்றை பயன்படுத்துங்கள்.
பிறகு 40 நிமிடங்கள் கழித்து முடியை மென்மையான ஷாம்பு கொண்டு நீரில் அலசி எடுங்கள்.
இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் கூந்தல் கருமையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |