30 நாட்களில் தலைமுடி அடர்த்தியாக வளர மூலிகை எண்ணெய்! வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடிகொட்டுதல், இளவயதிலேயே முடி கொட்டி வழுக்கை விழுதல், இளநரை, முடி அடர்த்தி இல்லாமல் இருப்பது பல பிரச்சனைகள் தலைதூக்கத் தொடங்கிவிட்டன.
இதற்காக செயற்கையான ஷாம்புகள், ஆயில்களை பயன்படுத்தும் போது பிரச்சனைகள் தீர்வதாக இருந்தாலும் பக்கவிளைவுகள் இருக்கின்றன.
எனவே இயற்கையாகவே ஹேர் ஆயில் தயாரித்து தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை பெறலாம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - 100 கிராம்
கீழாநெல்லி இலை - 100 கிராம்
கறிவேப்பிலை - 100 கிராம்
செம்பருத்தி பூ - 100 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
கரிசலாங்கண்ணி இலை - 50 கிராம்
தேங்காய் எண்ணெய் - 2 லிட்டர்
செய்முறை
மூலிகைகளையெல்லாம் வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் சுத்தமான வாணலியை வைத்து, மூலிகை மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொதிக்கவிடவும்.
மூலிகையின் தன்மை எண்ணெயில் இறங்கி நிறம் மாறத்தொடங்கிய உடன், அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடவும்.
மூன்று நாள்கள் கழித்து எண்ணெய்யை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றிவைத்துப் பயன்படுத்தவும்.
இந்த எண்ணெயை வாரம் 3 நாள்கள் பயன்படுத்தி வர, கூந்தல் வறட்சி இன்றி செழித்து வளரும்.
பெண்களே! அந்த இடத்தில் அரிப்போ எரிச்சலோ ஏற்படுகின்றதா? என்ன செய்யலாம்?