ஒரே வாரத்தில் நரைமுடியை கருப்பாக்க உதவும் எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், நரைமுடியை வீட்டிலேயே கருப்பாக மாற்ற உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
- மருதாணி- 1 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- 200ml
- கரிசிலாங்கண்ணி பொடி- ½ ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து மருதாணி இலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
எண்ணெய் சூடானதும் அதில் அரைத்த கருஞ்சீரகம் மற்றும் மருதாணி இலை சேர்த்து மிதமான தீயில் காயவிடவும்.
நன்கு கொதித்து எண்ணெய் நிறம் மாறி வந்ததும் அதில் கரிசிலாங்கண்ணி பொடி சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
எண்ணெய் நன்கு ஆறியதும் அதனை வடிகட்டி தலைமுடியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யவும்.
இதையடுத்து 1 மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி அனைத்தும் கருப்பாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |