இயற்கையாக நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.
அந்தவகையில், இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
- கறிவேப்பிலை- 1கைப்பிடி
- கருப்பு எள்- 2 ஸ்பூன்
- நெல்லிக்காய்- 2
- ரீத்தா- 3
- பச்சை மஞ்சள்- 2 துண்டு
தயாரிக்கும் முறை
முதலில் கடாயில் தேங்காய் எண்ணெயை சேர்த்து சூடாக்கவும். பின் சூடான எண்ணெயில் கறிவேப்பிலை, கருப்பு எள், நறுக்கிய நெல்லிக்காய், விதைகள் நீக்கிய ரீத்தா, பச்சை மஞ்சள் சேர்த்து சூடாக்கவும்.
அடுத்து எண்ணெய் நிறம் மாறத் தொடங்கும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
அதன் பிறகு, எண்ணெயை நன்கு ஆறவைத்து, வடிகட்டி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை தலைமுடியில் நன்கு தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் ஊறவைத்து பின் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி இயற்கையான முறையில் கருப்பாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |