வேகமாக கூந்தல் வளர இந்த ஒரு ஹேர்பேக் போதும்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், வேகமாக கூந்தல் வளர இந்த ஒரு ஹேர்பேக் பயன்படுத்தினால் போதும், அவற்றை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி பூ- 2
- செம்பருத்தி இலை- 1
- வெந்தயம்- 3 ஸ்பூன்
- அரிசி- 2 ஸ்பூன்
- பாசிப்பருப்பு - 4 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, வெந்தயம், அரிசி, பாசிப்பருப்பு ஆகியவரை சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இந்த பொருட்கள் அனைத்தும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்கு வற்றியவுடன் அடுப்பை அனைத்து இதனை ஆற வைத்துக் கொள்ளவும்.
பின்னதாக இந்த கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த ஹேர் பேக்கை உச்சந்தலையிலிருந்து தலைமுடியின் நுனி வரை தடவி அரை மணி நேரத்திற்குப் பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளவும்.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் தலைமுடி வேகமாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |