ஒரே வாரத்தில் நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை Hairpack.., எப்படி தயாரிப்பது?
முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், வீட்டிலேயே நரைமுடியை கருப்பாக்க உதவும் இயற்கை Hairpack எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மருதாணி பொடி- 3 ஸ்பூன்
- தயிர் - 2 ஸ்பூன்
- வெந்தய பொடி - 1 ஸ்பூன்
- காபி பொடி- 1 ஸ்பூன்
- துளசி சாறு - 3 ஸ்பூன்
- புதினா சாறு - 3 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு இரும்பு வாணலில் மருதாணி பொடி, தயிர், வெந்தய பொடி, காபி பொடி, துளசி சாறு, புதினா சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் இதில் சிறிது நீர் விட்டு அடுப்பில் டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கவும்.
அடுத்து இதை இரவு முழுக்க வைத்திருந்து மறுநாள் காலை கூந்தலில் தடவி இரண்டு மணி நேரம் வரை வைக்கவும்.
பிறகு கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் நரைமுடியை கருப்பாக மாற்றும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |