முடி உதிர்வை நிரந்தரமாக நீக்கும் இயற்கையான ஹேர்பேக்: வாரம் ஒரு முறை யூஸ் பண்ணுங்க
முடி உதிர்வு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாகும்.
பலரும் முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் முடி உதிர்வு மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மேலும் மன அழுத்தம், மரபணு பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற தலை முடி பராமரிப்பு இதுபோன்ற காரணங்கள் தான் தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.
அந்தவகையில் இயற்கை முறையில் முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த இந்த ஹேர் பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்
- தேங்காய்- 1 மூடி
- வெந்தயம்- 3 ஸ்பூன்
- முட்டை- 1
- பருத்தி துணி- சிறிதளவு
தயாரிக்கும் முறை
வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
மறுநாள் காலையில் தேங்காயினை துருவி அதை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும்.
இப்போது மிக்சி ஜாரில் ஊற வைத்துள்ள வெந்தயம் மற்றும் எடுத்துவைத்துள்ள தேங்காய் பால் இவை இரண்டையும் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.
அதன்பிறகு ஒரு பருத்தி துணியில் அரைத்துள்ள பேஸ்ட்டினை சேர்த்து சுத்தமாக வடிகட்டி பிழிந்து ஒரு பவுலில் வைத்துக்கொள்ளுங்கள்.
கடைசியாக பவுலில் உள்ள பேஸ்ட்டுடன் 1 முட்டையின் வெள்ளை கருவினை மட்டும் சேர்த்து 2 நிமிடம் வரை கலக்கவும்.
இப்போது தலையில் வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயினை அப்ளை செய்து விட்டு பின்னர் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை தலை முடியின் உச்சி முதல் வேர் வரை பூசவும்.
அதன்பிறகு 20 நிமிடம் கழித்து வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு கொண்டு தலை முடியினை அலசி விட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |