முடி வளர்ச்சியை வேகமாக அதிகரிக்க வேண்டுமா? இந்த மூலிகையை பயன்படுத்துங்க
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் நீண்ட, ஆரோக்கியமான முடியை பராமரிக்க இயற்கையான பொருட்களின் பயன்படுத்த வேண்டும்.
தலைமுடி வளர்ச்சியை வேகமாக அதிகரிக்கும் 6 இயற்கை மூலிகைகளை பற்றி பார்க்கலாம்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் ஆயுர்வேத மூலிகைகளும், வைட்டமின் சி சத்துக்களும் அதிகளவில் இருக்கின்றன. மேலும், முடியை அடர்த்தியான வளர்ச்சிக்கு உதவும் சத்துக்களும் இதில் அதிகமாக இருக்கின்றன.
நெல்லிக்காயை எண்ணெய், நெல்லிக்காய் ஹேர் மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்தி நமது முடியை வலுபெற செய்யலாம்.
பிருங்கராஜ் எண்ணெய்
பிருங்கராஜ் மூலிகை எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவி புரிவது மட்டுமன்றி முடி உதிராமலும் தடுக்கிறது.
மேலும், உச்சந்தலைக்கு ஊட்டமளித்து ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதனால் முடி வேகமாக வளர்ந்து, அடர்த்தி குறையாமல் இருக்கும்.
வெந்தயம்
வெந்தயத்தில் புரோட்டீன்கள் மற்றும் நிகோடினிக் சத்துக்கல் அதிகளவில் உள்ளன. இவை முடிக்கு நன்மை அளிக்கின்றன.
மேலும் தலையில் உள்ள மயிர்க்கால்களை வலுப்படுத்துகின்றன, முடி உடைவதைத் தடுக்கின்றன. முடிக்கு பிரகாசத்தையும் சேர்க்கின்றன. வெந்தய விதைகளை ஒரே இரவில் ஊறவைத்து, பேஸ்டாக அரைத்து பயன்படுத்தலாம்.
கற்றாழை
கற்றாழை சாற்றை நேரடியாக உச்சந்தலையில் தடவுவது, ரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
இதில் உள்ள pH அளவுகள், உச்சந்தலையில் வீக்கத்தைக் குறைத்து மற்றும் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும். மேலும், இது ஒரு இயற்கை கண்டீஷனராகவும் உபயோகிக்கப்படுகிறது.
செம்பருத்தி
செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களில் உள்ள வைட்டமின் சத்துக்கள் மற்றும் அமினோ ஆசிட் சத்துக்கள் முடிக்கு ஊட்டமளிக்கவும், முடி வளரவும், முடி கொட்டாமல் தடுக்கவும் உதவுகிறது.
இதில் உள்ள இயற்கை சத்துக்கள் முடியை மென்மையாக மாற்றவும் ஊக்கமளிக்கிறது. செம்பருத்தியால் ஹேர்மாஸ்க், எண்ணெய், சீரம் ஆகியவற்றை செய்து பயன்படுத்தலாம்.
வேப்பிலை
வேப்பிலையில் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ள மூலிகையாகும்.
இது உச்சந்தலையை சுத்தப்படுத்தி, பொடுகு வராமல் தடுக்கவும் முடியை மேம்படுத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் தலையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளைத் தடுப்பதன் மூலம் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
வேப்ப எண்ணெய் அல்லது வேப்பிலை கலந்த பொருட்களை பயன்படுத்துவதால் முடிக்கு நல்ல ஊட்டமளிக்கும் சத்துக்கள் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |