நெஞ்சு சளியால் பெரும் அவஸ்தையா?அதனை போக்க உதவும் சில அற்புத இயற்கை மருத்துவ குறிப்புக்கள்!
medicine
natural
mucus
By Kishanthini
சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை.
மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.
நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும். எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லது.
இதற்கு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- மூலிகை தேநீர் அல்லது வெதுவெதுப்பான நீர் மற்றும் எலுமிச்சையுடன் 2 டீஸ்பூன் தேனை கலந்து உட்கொள்வதன் மூலம் இருமலுக்கான சொந்த தீர்வை வீட்டிலேயே தயார் செய்யலாம்.
- புதினாவில் உள்ள மெந்தால் சளியை நீக்க உதவுகிறது. புதினா தேநீர் குடிப்பதன் மூலம் அல்லது புதினா நீராவியை உட்கொள்வதன் மூலம் பயனடையலாம்.
- இஞ்சி வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா இருமலைக் குறைக்க உதவுகிறது. சளி அல்லது கபத்தை உருவாக்கும் இருமலில் இருந்து விடுபட நீராவியை எடுத்துக்கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
- சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கி குடிப்பதுடன் கொதிக்கும் நீரில் 2 மேசை கரண்டி சுக்கு தூளுடன் 1/4 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு, 1 மேசை கரண்டி தேன் கலந்து பருகினால் நன்று.
- நெஞ்சு சளியை உடனே தீர தினமும் 2 மேசை கரண்டி இஞ்சி சாற்றில் 2 மேசை கரண்டி தேன் கலந்து தினமும் 3 வேளை உண்ண வேண்டும்.
- தொண்டை புண் மற்றும் ஈரமான இருமலுக்கு சிகிச்சையளிக்க உப்பு நீர் கொண்டு வாய் கொப்புளிக்கவும். ஏனெனில் உப்பு நீர் தொண்டையின் பின்புறத்தில் உள்ள கபம் மற்றும் சளியைக் குறைக்கிறது மற்றும் இருமலைப் போக்குகிறது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US