உங்கள் வீட்டில் அருகே பூத்துக் குலுங்கும் இந்த அற்புத செடி பற்றி தெரியுமா? உலகமே வியக்கும் மருத்துவம்
நித்திய கல்யாணி ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
Catharanthus roseus என்பது இதன் தாவரவியல் பெயர். எந்தப்பருவத்திலும் பூக்கும் என்ற ஒரே அர்த்தம் காரணமாக நித்ய கல்யாணி என்று தமிழில் பெயர் வந்தது.
நித்தியகல்யாணி தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. பாழ் நிலங்கள், சாலையோரங்களில் அதிகமாகக் காணலாம். அழகுத் தாவரமாக வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது.
பெரும்பாலானவர்கள் ஓர் அழகுச்செடியாக இதனை வளர்த்தாலும் இலைகள், பூக்கள், தண்டு மற்றும் வேர்கள் என அனைத்துப் பகுதிகளும் மிகுந்த மருத்துவ பயன்கள் கொண்டவை.
அந்தவகையில் நித்திய கல்யாணியில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் என்னெ்னன என்பதை தெரிந்து கொள்வோம்.
- விஷ ஜுரம் மற்றும் நாட்பட்ட காய்ச்சலை குணமாக்கக்கூடியது இந்த நித்தியகல்யாணி.
- புற்று நோயை கூட கல்யாணி இலையைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்தால் குணப்படுத்த இயலும். இதற்கு நித்தியகல்யாணியின் இலைகள், தண்டு, வேர் என அனைத்தையும் நீரிலிட்டு நன்கு கொதிக்க பாதியாக சுண்டி வந்தவுடன் அதனுடன் தேன் சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.
- நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைபடும் பதத்திற்கு வந்த பிறகு அதனை பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
- முறையற்ற மாத விடாய் கோளாறுகளை முழுவதுமாக நீக்க உதவுகிறது இந்த நித்திய கல்யாணி.
- ஆஸ்துமாவை கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து அதனுடன் தேன் சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.
- இரத்த சர்க்கரையின் அளவு உச்சமாக இருக்க அதனால் உடலில் ஏற்படும் விளைவுகளே நீரிழிவு நோயாகும். கணையத்தின் சுரக்கும் இன்சுலின் உடலுக்கு போதுமானதாக இல்லாமல் போவது தான் நீரிழிவு நோயாகும்.
- நீரழிவு நோய்க்கு நித்தியகல்யாணியை சிறந்த மருந்தாக கொள்ளலாம். இது பழுதுபட்ட கணையத்தை சரிசெய்வதோடு, உடல் செல்களின் இயக்கங்களை சரி செய்கிறது.
- உடல் அசதி குணமாக 5 நித்தியகல்யாணி பூக்களை ½ லிட்டர் நீரில் இட்டு பாதியாகக் சுண்டக் காய்ச்சி குடிக்க வேண்டும். இதைப் போல ஒரு நாளைக்கு 3 வேளைகள் 5 நாள்கள் வரை சாப்பிடலாம்.
- நீரழிவு கட்டுபட நித்தியகல்யாணி வேர்த்தூள் 1 சிட்டிகை அளவு சுடுநீரில் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறைகள் ஒரு வாரம் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.
- சிறுநீர் தாரை நோய்கள் சரியாக நித்தியகல்யாணி பூக் கஷாயம் தினமும் நான்கு வேளைகள் 25 மிலி அளவு சாப்பிட வேண்டும். அல்லது வேரை காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர வேண்டும்.
- ஐந்து முதல் 10 வரை நித்திய கல்யாணி பூக்களையும், தேவைக் கேற்ப சீரகத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் கலந்து, ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி குடித்து வர, சர்க்கரை நோயின் அளவு குறையும்; ரத்த அழுத்தம் இருந்தாலும் சீராகும்.
- நித்திய கல்யாணி இலை ஐந்தோடு வெருகடி அளவு சீரகம் சேர்த்து தீநீராக்கிப் போதிய இனிப்பு சேர்த்து பருகி வர ரத்த ஓட்டம் சீர்பெறும். இதனால் மன அழுத்தம், தலைவலி, மயக்கம் ஆகியன குணமாகும்.
- நித்திய கல்யாணி செடியின் துளிர் இலைகள் ஐந்தாறு எடுத்து சிறிது சுக்கு, சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து தினம் இருவேளை அருந்தி வர வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு ஆகியன குணமாகும்.
- நித்திய கல்யாணி பூக்களை பத்து எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டிக் கண்களைக் கழுவ கண் நோய்கள் குணமாகும். இதைக் கொண்டு ஆறாதப் புண்களைக் கழுவி வர விரைவில் ஆறும்.
- உடல் அசதி குணமாக 5 நித்தியகல்யாணி பூக்களை அரை லிட்டர் நீரில் இட்டு பாதியாகக் சுண்டக் காய்ச்சி குடிக்கவேண்டும்.