முழங்கால் வரை முடி வளர இந்த மூன்று பொருட்கள் போதும்: இப்படி Use பண்ணுங்க
பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.
ஆனால் பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும். தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் நீண்ட, ஆரோக்கியமான முடியை பராமரிக்க வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருட்கள் போதும்.
தேவையான பொருட்கள்
- அரிசி- 2 ஸ்பூன்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 5
பயன்படுத்தும் முறை
முதலில் அரிசியை 2 முறை நன்கு கழுவி பின் 15 நிமிடங்கள் ஊறவைத்து அரிசி ஊறிய தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அரிசி ஊறிய நீரில் வெந்தயம் சேர்த்து 1 நாள் இரவு முழுவதும் ஊறவைத்து வெந்தயம் ஊறிய தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் மற்றும் வெந்தயம் ஊறிய நீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் நன்கு அரைத்தும் அதனை வடிகட்டி எடுத்துட்டு அந்த நீரை 10 நிமிடம் அப்படியே விட்டுவிடவும்.
அடுத்து ஒரு பருத்தி கொண்டு அந்த நீரில் நனைத்து உச்சந்தையில் நன்கு தடவிக்கொள்ளவும்.
பின் ஒரு மணி நேரம் விட்டு மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிக்கொள்ளலாம்.
இந்த பேக்கை தொடர்ந்து வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தி வர கூந்தல் வேகமாக வளர ஆரம்பிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |