தாங்கமுடியாத பல் வலி ஏற்பட்டால் சில நிமிடங்களில் குணமாக என்ன செய்யனும் தெரியுமா?
பல்வலி ஏற்பட்டால் அதை பொறுத்து கொள்வது மிக கடினமான விடயமாக இருக்கும்.
பற்கள் சுத்தமின்மை காரணத்தினால், தாங்க முடியாத பல்வலி, ஈறுகள் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் அந்த பிரச்சனைகளை குணமாக்க, இயற்கையில் உடனடி தீர்வுகள் உள்ளது.
பல்வலி பிரச்சனையை சில நிமிடங்களில் குணமாக்கும் தீர்வுகள்
நமது பற்களின் கீழ் பகுதியில், ஒரு வெங்காயத்தை மெல்லிசாக நறுக்கி வைத்தால், தாங்க முடியாத பல்வலி உடனே குறையும்.
பல்வலி ஆரம்பம் ஆகும் போதே, ஒரு வெங்காயத்தை எடுத்து வாயில் போட்டு மெல்ல வேண்டும். இதனால் பற்களின் வலியை அதிகரிக்க செய்யாமல் தடுக்கலாம்.
ஒரு காட்டன் பஞ்சை கொண்டு 3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து, அதை பல்வலி உள்ள இடத்தில் தேய்த்து கொடுத்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தாங்க முடியாத பல்வலியின் போது, ஒரு வெள்ளரிக்காயை மெல்லிசாக நறுக்கி, அதை பற்களுக்கு அடியில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். இதனால் பல்வலி குறைந்துவிடும்.
பல்வலி அதிகமாக இருந்தால், இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி, அதை பல்வலி உள்ள இடத்தில் வைத்து, மெல்ல வேண்டும்.