கால் ஆணியால் அவதியா? இதனை குணமாக இதோ அற்புதமான இயற்கை வைத்தியம்!
காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் காலில் ஆணி நோய் பலருக்கு வருகிறது.
காலில் ஆணி வந்து விட்டால், பாதத்தை தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.
கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது. எனவே இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது.
அந்தவகையில் தற்போது கால் ஆணியை சரி செய்ய உதவும் ஒரு சூப்பரான இயற்கை வழி ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையானவை
- கற்பூரம் - 5
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- மருதாணி இலை - ஒரு கைப்புடி
- கற்றாழை - ஒரு தேக்கரண்டி
- வசம்பு பொடி - ஒரு தேக்கரண்டி
செய்முறை
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு மருதாணி இலையை நன்கு மை போல அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
மேலும் இதனுடன் இடித்த கற்பூரம்,மஞ்சள் தூள்,கற்றாழை உட்பகுதி மற்றும் வசம்பு பொடி ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.
இதை கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி துணியால் நன்கு இறுக்கமாக கட்டவும்.
இதை இரண்டு முறை செய்து வந்தால் போதும் கால் ஆணி முற்றிலுமாக குணமாகும்.
இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத நன்கு பயனளிக்க கூடிய மருத்துவம் ஆகும்.