உயிருக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தும் இரத்த அழுத்தத்தை இயற்கையாக எப்படி குறைப்பது?
உயர் இரத்த அழுத்தம் என்பது மிகவும் பொதுவான வாழ்க்கை முறை நோய்களில் ஒன்றாகும். இது தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது.
உலகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
இது பல்வேறு இதய நோய்களுக்கான மிகப்பெரிய ஆபத்தாகும். ஆனால் ஒருவர் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை இணைப்பதன் மூலமும் அவர்களின் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
தற்போது உயிருக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தும் இரத்த அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் என்பதை பார்ப்போம்.
அந்தவகையில் தற்போது உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் இயறக்கை வழிகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- அதிகப்படியான சோடியம் உட்கொள்ளலுடன் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
- பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் சோடியம் நிரம்பியுள்ளது மற்றும் அதை சமநிலைப்படுத்த நீங்கள் அதிக பொட்டாசியம் நிறைந்த உணவை உணவில் சேர்க்க வேண்டும்.
- கீரைகள், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம்.
- முலாம்பழம், வாழைப்பழம், அவகேடோ, ஆரஞ்சு மற்றும் பாதாமி எடுத்து கொள்ளலாம்.
- நட்ஸ்கள் மற்றும் விதைகள், பால், தயிர், டுனா மற்றும் சால்மன் மீன் போன்றவை எடுத்து கொள்ளலாம்.
- ஒவ்வொரு நபருக்கும் வழக்கமான உடற்பயிற்சி முக்கியம். ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமாக இருக்கவும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- சிகரெட் மற்றும் ஆல்கஹால் இரண்டும் உயர் இரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கும். இவற்றை தவிர்ப்பது நல்லது.
- ரொட்டி மற்றும் வெள்ளை சர்க்கரை இந்த இரண்டு உணவுப் பொருட்களின் உட்கொள்ளலைக் குறைப்பது இரத்த அழுத்தத்தின் அளவை இயற்கையாக நிர்வகிக்க உதவும்.
- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிலோ எடையைக் குறைக்க குறைந்த கார்ப் உணவை உட்கொள்ள வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட மாவுக்கு பதிலாக முழு தானியங்கள் மற்றும் வெள்ளை சர்க்கரை பதிலாக நாட்டு சர்க்கரை, வெல்லம் அல்லது தேனுடன் மாற்றலாம்.