கழுத்தில் உள்ள கருமையை நிரந்தரமாக நீக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்
பெண்களுக்கு கழுத்தில் செயின் எப்போதும் அணிந்து கொண்டே இருப்பதால் அது கழுத்தில் பதிந்து கருப்பாகிவிடும்.
அதேபோல், ஆண்களுக்கு கழுத்து பகுதிகளில் காலர் துணி அணிவதால் கருமை நிறம் ஏற்படுகிறது.
கழுத்தில் உள்ள கருமையிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் பெற உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 1
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- தேன்- ½ ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி சாற்றை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
இப்போது ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, தேன் மற்றும் உருளைக்கிழங்கு சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்டை கழுத்தில் உள்ள கருமை பகுதிகளில் தடவி லேசாக மசாஜ் செய்யவும்.
பத்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு தண்ணீரால் கழுத்துப்பகுதியை கழுவி கொள்ளுங்கள்.
இந்த கலவையை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கழுத்தில் உள்ள கருமை நிரந்தரமாக மறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |