சிறுநீரக கற்களை உடனடியாக கரைக்கும் பூ
சிறுநீரகத்தின் எந்தவொரு பாதிப்பாக இருந்தாலும் உடனடியாக தீர்வை தரக்கூடிய மூலிகை சிறுகண்பீளை.
பலராலும் பொங்கல் பூ என அறியப்படும் சிறுகண் பீளையின் அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணங்களை கொண்டது.
நீர்நிலை பகுதிகளிலும், தரிசு நிலங்களிலும் வளரக்கூடிய இம்மூலிகையின் பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், உடலில் கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது சிறுகண் பீளை.
கசாயம் தயாரிப்பது எப்படி?
சிறுகண் பீளையின் வேரை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும், வேர் இல்லாமல் கசாயம் தயாரிக்க வேண்டாம்.
அடுத்ததாக பூக்களை சேர்க்கவும், இது இரண்டையும் அரைக்கும் பொழுதே சிறிதளவு நாட்டு சக்கரை சேர்த்துக் கொள்ளவும்.
கடைசியான இதனுடன் சிறிது பால் சேர்த்து அரைக்கவும், நன்றாக மைய அரைத்த பின்னர் வேறொரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.
ஒருநாளைக்கு 50 முதல் 100 மில்லி லிட்டர் வரை அருந்தலாம், கடுமையான வலியால் அவதிப்படும் நபர்கள் 15 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.
அவ்வப்போது வலியால் அவதிப்படும் நபர்கள் வாரம் இருமுறை இதனை எடுத்துக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |