இயற்கை முறையில் ஒரே நாளில் முகம் வெள்ளையாக மாற இந்த 3 பொருட்கள் போதும்
இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்க 3 பொருட்கள் மட்டும் வைத்து தயாரிக்கப்படும் இந்த face pack போதும்.
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் முகம் கருப்பாக மாறிவிடுகின்றன.
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த பேஸ்பேக்கை பயன்படுத்தி வர முகத்தை வெள்ளையாகவும், பொலிவாகவும் இருக்க உதவுகின்றன.
தேவையான பொருட்கள்
- வெந்தய பொடி- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்
- காய்ச்சாத பால்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வைத்து நிறம் மாறாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் மிக்ஸியில் சேர்த்து பொடித்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பௌலில் வெந்தய பொடி, கற்றாழை ஜெல் சேர்த்து கலந்துகொள்ளவும்.
தொடர்ந்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து குழைத்து மென்மையான பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்பேக்கை பயன்படுத்தும் முன், முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக, மிக்ஸ் செய்து வைத்திருக்கும் பேஸ்பேக்கை கழுத்திலிருந்து தொடங்கி கீழிருந்து மேல் நோக்கி தடவி 20 நிமிடங்கள் நன்கு உலர விடுங்கள்.
பின் குளிர்ந்த நீரால் நனைத்து நன்கு மென்மையாக ஐந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து விட்டு, பிறகு நன்கு முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |