வெள்ளை சர்க்கரைக்கு பதில் இயற்கை இனிப்பு உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
ஒரு சிலர் அடிக்கடி இனிப்பு சாப்பிடுவதை ஒரு பழக்கமாகவே கொண்டிருப்பார்கள்.
இருந்தாலும் அளவிற்கு அதிகமாக சர்க்கரை எடுத்துக் கொள்வது நம்முடைய உடலுக்கு மோசமான தீங்கை ஏற்படுத்தும்.
குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
அந்தவகையில், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இயற்கை இனிப்பு உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

1. பேரிச்சம்பழம்- குறைந்த கலோரியும் அதிக ஊட்டச்சத்தும் நிறைந்தவை பேரிச்சம்பழங்கள். மேலும், நார்ச்சத்து, மினரல்கள் மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாகவும் இருக்கும் இவற்றை, சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
2. உலர் திராட்சை- இதில் உள்ள இரும்புச்சத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிக்கும்.
3. வெல்லம்- வெல்லத்தில் உள்ள அதிக இரும்புசத்து ரத்த சோகை வராமல் தடுக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குளுக்கோஸ் அளவை சீராக்கி, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. வெல்லம் செரிமான நொதிகள் உற்பத்தியைத் தூண்டி மலச்சிக்கல் வராமல் தடுத்து, செரிமானத்திற்கு உதவுகிறது.
4. தேன்- ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த தேன் உடலில் வீக்கத்தை எதிர்த்து போராடி, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு விதமான உடல்நல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் தொண்டை வலிக்கு இயற்கை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |