கொத்து கொத்தாக முடி கொட்டுதா? அடர்ந்த கூந்தலை பெற இதை மட்டும் செய்யுங்கள்
பெண்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், நீளமான அடர்ந்த கூந்தல் வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்யுங்கள் போதும்.
அடர்ந்த கூந்தலை பெற என்ன செய்வது?
உச்சந்தலையில் மசாஜ்- முடி உதிர்வை தடுக்க வாரத்திற்கு ஒருமுறையாவது தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெயெண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.
உணவு முறை- ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், பயறு வகைகளை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளவதால் டியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
இறுக்கமான பின்னலைத் தவிர்க்கவும்- இதனால் கூட தலைமுடி கொட்டக்கூடும். எனவே தலைமுடியை எப்போதும் இறுக்கமான பின்னக்கூடாது.
நீரேற்றத்துடன் இருத்தல்- இடைவெளி விட்டு விட்டு தண்ணீர் குடிக்ப்பது, 8 மணி நேர தூக்கம் இதனை வழக்கமாக்கிக்கொள்வதால் முடி உதிர்வு தடுக்கும்.
வெங்காய சாறு- வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் சத்துக்கள் தலைமுடியின் வேர் வரை சென்று முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதோடு அதன் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.
கலரிங் செய்வதைத் தவிர்க்கவும்- அதிக கெமிக்கல் நிறைந்த கலர் சாயங்கள் முடி உதிர்வை அதிகமாக்கும். எனவே கலரிங் செய்வதைத் தவிர்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |