உங்க மூட்டு பகுதியில் கருமையா இருக்கா? இதனை போக்க என்ன பண்ணலாம்?
beauty tips
hand
whitening
dark knees
By Kishanthini
பொதுவாக நம்மில் பலருக்கு மூட்டுக்கள் கருமையாக காணப்படுவதுண்டு.
இதற்கு இறந்த செல்கள் படிந்திருப்பது, மெலனின் சுரப்பு அதிகரிப்பு, ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வு, மரபணு காரணிகள், உடல்பருமன் போன்றவையும் மூட்டு பகுதிகளின் கருமைக்கு காரணமாக இருக்கின்றன.
மூட்டு கருமை பாதிப்பை எளிதில் சரி செய்ய முடியாது என்றாலும் வீட்டு வைத்தியம் செய்து நாளடவில் மூட்டில் இருக்கும் கருமையை முழுமையாக நீக்கி விடலாம்.
தற்போது மூட்டு பகுதியில் இருக்கும் கருமையை போக்கும் சில வழிமுறைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதனை மூட்டு பகுதியில் வைத்து அழுத்தி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு சாதாரண நீரில் மூட்டு பகுதியை கழுவிவிடலாம். உலர்ந்ததும் ஈரப்பதத்தன்மை கொண்ட லோஷனை பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து மூட்டு பகுதியில் தடவி மசாஜ் செய்துவிட்டு கால் மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.
-
தேங்காய் எண்ணெய்யை மூட்டு பகுதியில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய்யுடன் அதே அளவு எலுமிச்சை சாறை கலந்து கருப்பு படிந்திருக்கும் பகுதியில் தடவியும் மசாஜ் செய்து வரலாம். உலர்ந்ததும் சாதாரண நீரில் கழுவிவிடலாம்.
-
தயிருடன் வினிகரை கலந்து நன்றாக குழைத்து மூட்டு பகுதியில் தடவிவிட்டு உலர்ந்ததும் நீரில் கழுவிவிடலாம். அதன் பிறகு ஈரப்பதத்தன்மை கொண்ட லோஷனை தடவிவிடலாம். தயிருடன் கடலை மாவை குழைத்தும் தடவி வரலாம்.
-
சர்க்கரையுடன் சம அளவு ஆலிவ் எண்ணெய் கலந்து மூட்டு பகுதியில் தடவிட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம். இறந்த செல் அடுக்குகளை மெதுவாக துடைத்து அகற்றவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மூட்டு பகுதியில் இருக்கும் கருமை மறைந்துவிடும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US