கொசுக்களை விரட்ட இயற்கை முறையில் விரட்ட வேண்டுமா? இதோ சில எளிய வழிமுறைகள்
By Kishanthini
2 மாதங்கள் முன்
பொதுவாக கொசுக்களை ஒழிக்க கொசுவத்தி, கொசு பேட் எனப் பலவற்றை உபயோகித்தாலும் குறையாத கொசுக்களை, வீட்டில் உள்ள சில இயற்கைப் பொருள்களை வைத்து விரட்டலாம்.
அந்தவகையில் கொசுக்களை இயற்கை முறையில் விரட்ட என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
image - wikipedia
- கடுகு எண்ணெயில் கொத்தமல்லியை அரைத்து ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து வீட்டைச் சுற்றி வைக்கவும்.
- வீட்டில் சாமந்தி, லாவெண்டர், துளசி போன்ற செடிகளை வளர்க்கலாம். அதன் வாசனை கொசுக்களை விரட்டும்.
- புதினா, கற்பூரவல்லி, காட்டுத் துளசி, கற்றாழை, செவ்வந்தி போன்ற செடிகள் கொசுக்களின் பரம விரோதி. இந்த எளிய செடிகளை வீட்டில் வளர்த்தால், கொசுக்கள் நெருங்காது.
- வேப்ப இலைகளை எரித்து கொசுக்களை விரட்டலாம்.
- புதினாவை லேசாக தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதிலிருந்து வரும் வாசனையால் கொசுக்கள் பறந்துவிடும்.
- வீட்டை சுற்றிலும் தூய்மையை கடைபிடிக்கவும், அடைப்புகள் இல்லாமலும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.
- வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றுவதினால், அவற்றில் இருந்து வரும் வாசனையினால் வீட்டுக்குள் இருக்கும் கொசு உடனே காணாமல் போய்விடும்.
- காலை, மாலை வேளைகளில் கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்து புகையாகப் போட்டால் கொசுக்கள் எட்டிப்பார்க்காது.
- உலர வைத்த வேப்பிலை, நொச்சி, யூகலிப்டஸ் இலைகளும் புகை போட ஏற்றது.
- எலுமிச்சைப் பழத்தைப் பாதியாக நறுக்கி, அதில் கிராம்பை நட்டு வைத்தால், அதிலிருந்து வரும் வாசனை கொசுக்களை நெருங்க விடாது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US