தங்கம் போல் முகத்தை ஜொலிக்கவைக்க இதை மட்டும் செய்தாலே போதும்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க சில வீட்டு வைத்தியங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.
ஈரப்பதம்
பெண்கள் சருமத்தை நீரேற்றமாகவும் பளபளப்பாகவும் வைக்க ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது குளிர்ந்த தண்ணீர் கொண்டு முகம் கழுவலாம்.
ஸ்க்ரப்
முகத்தை பொலிவாக்க வாரத்திற்கு இரண்டு முறை லேசான ஸ்க்ரப் மூலம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும்.
முகத்தில், இறந்த செல்களை நீக்கும் பொழுது முகம் பொலிவு பெற ஆரம்பிக்கிறது.
சுத்தம்
முகத்தை ஸ்கிரப் செய்த பிறகு சருமத்திற்கு ஏற்ப சரியான கிளன்சரை பயன்படுத்தி சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
ஆரோக்கியமான உணவு
சருமம் பொலிவாக இருக்க முதலில் உணவில் சர்க்கரை மற்றும் உப்பு சேர்ப்பதை நிறுத்த வேண்டும்.
முகம் பொலிவாக இருக்க ஆரஞ்சு பழம், எலுமிச்சை பழம் போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் அவகேடோ பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
மேலும், சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
சருமத்திற்கு ஏதுனும் இயற்கை பேக்கை பயன்படுத்தலாம். குறிப்பாக முகம் பொலிவு பெற போதுமான அளவு தூக்கம் மிக முக்கியம்.
சில டிப்ஸ்
சருமத்தின் அழுக்கை நீக்கி ஈரப்பதத்தை கொடுக்க தினமும் இரவு 15 நிமிடங்களுக்கு ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் கொண்டு முகத்தை துடைக்கவும்.
கற்றாழை பேஸ்டை வாரத்திற்கு இரண்டு நாட்கள் முகத்தில் தடவி வந்தால் சருமம் ஈரப்பதத்துடன் பொலிவாகும்.
உருளைக்கிழங்கு பேஸ்டை வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீர் கொண்டு கழுவினால் முகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஈரப்பதத்துடன் பொலிவு பெற உதவும்.
மஞ்சளுடன் சிறிது தேன் கலந்து முகப் பருக்கள் உள்ள பகுதியில் தடவி வந்தால் நாளடைவில் முகப்பருக்கள் குணமாகும்.
மஞ்சள் தூளுடன் உளுத்தம் பருப்பு அல்லது அரிசி மாவு கலந்து பேஸ்டை வாரத்திற்கு ஒரு முறை இரவில் முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை குறைக்கவும் முகத்தில் முகப்பருக்கள் வராமல் தடுக்க உதவுகிறது.