ஆறு மணிக்கு மேல் நுளம்புக் கடி அதிகமா இருக்கா? இத மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்!
பொதுவாகவே நாம் வாழும் சுற்று சூழலில் நுளம்பின் தொல்லையானது அதிகமாக காணப்படுகின்றது. அதனால் உடலில் பல நோய்களும் காயங்களும் ஏற்படுகின்றது.
இதை எப்படி தடுப்பது என்று தெரியமால் கவலையாக இருகின்றீர்களா? இனி கவலை வேண்டாம்.
வீட்டிற்குள் எப்படி நுளம்பானது வருகின்றது மற்றும் இது வராமல் இருக்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து என்ன செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வீட்டிற்குள் நுளம்பு வருவது எப்படி?
நுளம்புகள் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதுபோன்று நம்மை நோக்கி அவை தொடர்ந்து வருவதற்கும் பல காரணங்கள் உண்டு.
கார்பன் டை ஆக்சைடு, உடல் வியர்வை, அழுக்கு அல்லது பாதங்களில் துர்நாற்றம் உள்ளிட்டவற்றினால் மனித உடலில் இருந்து குறிப்பிட்ட ஒரு வாயு தோன்றும். இதை ஈர்க்க கூடியது தான் நுளம்பு. 100 அடி தூரம் என்றாலும், அது அந்த மணத்தை நாடி வருமாம்.
இயற்கையான முறையில் நுளம்பை எப்படி தடுப்பது?
-
காலையும் மாலையும் கற்பூரத்துடன் சாம்பிராணி சேர்த்து புகை போடலாம்.
- யூகலிப்டஸ் இலைகளை உலர வைத்து அதை எரித்து புகை மூட்டலாம்.
-
பூண்டு எண்ணெயுடன் தண்ணீரை 1:5 என்ற விகிதத்தில் கலந்து வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு மூளைகளில் கட்டி வைக்கலாம்.
- எலுமிச்சைப் பழத்தை பாதியாக வெட்டி அதில் கிராம்பை நட்டு வைக்க வேண்டும்.
-
புதினா இலைகளுடன் நீர் சேர்த்து அரைத்து, வீடு முழுவதும் தெளிக்கலாம்.
- புதினா செடியை ஜன்னல் ஓரத்தில் வைத்தாலும் நல்லது.
- தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சில துளிகள் எடுத்து லாவண்ர் எண்ணெயுடன் கலந்து உடம்பில் தேய்த்துக்கொள்ளலாம்.
-
ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி அதில் கற்பூரத்தை மிதக்கவிட்டால் நுளம்பு வராது.
- வேப்ப எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உடலில் தேய்க்கலாம்.
-
வேப்ப எண்ணெய், யூகலிப்டஸ் ஆயில் மற்றும் கிராம்பு எண்ணெய் சேர்த்து வீடு முழுவதும் தெளிக்கலாம்.
- வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெயை 1:1 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்க்கலாம்.
- வெட்டிவேர் எண்ணெயை உடலில் தேய்த்தால் நுளம்புகள் நெருங்காது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |