நவராத்திரி ஸ்பெஷல் பச்சரிசி பாயசம் செய்வது எப்படி?
பெண் தெய்வங்களை கொண்டாடும் நவராத்திரி விரதமானது இவ்வருடம் அக்டோபர் 3 முதல் அக்டோபர் 12 வரை நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் இந்த காலத்திற்காக காத்திருப்பது சைவர்களின் விருப்பம் என்றே கூறலாம். வருகின்ற 9 நாட்களும் திருவிழா போன்று கொழு வைத்து வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
அவ்வாறன நிலையில் நீங்கள் வீட்டில் எப்படி பச்சரிசி பாயசம் செய்து படைக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - 1/2 கப்
- தண்ணீர் - 1 1/2 கப்
- பால் - 1 லிட்டர்
- கன்டென்ஸ்டு மில்க் - 200 கிராம்
- நெய் - 2 தேக்கரண்டி
- முந்திரி பருப்பு
- திராட்சை
- ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
- குங்கும பூ
செய்முறை
1. பச்சரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, 2 விசில் வரும் வரை பிரஷர் குக் செய்யவும்.
2. கடாயில் பால் ஊற்றி கொதிக்கவிடவும்.
3. பால் அளவு பாதியாக குறைந்த பின் வேகவைத்த பச்சரிசியை போட்டு கிளறவும்.
4. இதனுடன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்.
5. தாளிப்பு கரண்டில் நெய் ஊற்றி, முந்திரி திராட்சை வறுக்கவும்.
6. பால் நன்கு கொதித்து சுண்டும் பொழுது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான பச்சரிசி பாயாசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |