அரையிறுதி வாய்ப்பை இழந்த பெங்களூரு அணி! விராட் கோலியை கலாய்த்த ஆப்கானிஸ்தான் வீரர்
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில், விராட் கோலியை இளம் வீரர் ஒருவர் கலாய்த்துள்ளார்.
ஐபிஎல் லீக் சுற்று
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில், யார் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது என கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், மற்றும் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ போன்ற அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தகுதி ஆகிய நிலையில், பெங்களூரு அணி மற்றும் மும்பை அணிகளுக்கு வாய்ப்பு இருந்தது.
For one last time this season ?
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
Here’s how the Points Table stands after 7️⃣0️⃣ matches of #TATAIPL 2023
Did your favourite team qualify for the playoffs? ? pic.twitter.com/972M99Mxts
இதனிடையே நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், நடைபெற்ற குஜராத் உடனான கடைசி லீக் போட்டியில், ஆடிய ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது.
— Gujarat Titans (@gujarat_titans) May 21, 2023
அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்தும், அப்போட்டியில் பெங்களூரு அணியால் ஜெயிக்க முடியவில்லை. இதனால் அரையிறுதி சுற்றுக்கு மும்பை அணி தேர்வாகியது.
கோலியை கலாய்த்து பதிவு
இந்நிலையில் ஏற்கனவே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும், ஆர்சிபிக்கும் நடைபெற்ற போட்டியில் விராட் கோலிக்கும், லக்னோ அணியை சேர்ந்த ஆப்கான் வீரர் நவின் உல் ஹக்கும் சண்டை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து லக்னோ அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் வாக்குவாதம் நடைபெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Naveen ul haq latest insta status ??? pic.twitter.com/dB30EMjbqa
— I.P.S?️ (@Plant_Warrior) May 21, 2023
தற்போது லீக் சுற்றில் தோற்று, அரையிறுதி வாய்ப்பை இழந்த, ஆர்சிபி அணியின் வீரர் விராட் கோலியை கலாய்க்கும் வகையில், நவின் உல் ஹக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகைச்சுவையாக ஒருவர் சிரிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு கோலியை கலாய்த்துள்ளார்.
இதனிடையே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. ஏற்கனவே இருவரும் மைதானத்தில் சண்டையிட்டதற்காக ஐபிஎல் நிர்வாகம் அவர்களுக்கு அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.