என் மீது தப்பு இல்லை... மோதலில் ஈடுபட்டது விராட்கோலி தான்- நவீன் உல் ஹக்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து நவீன் உல் ஹக் மனம் திறந்து பேசியுள்ளார்.
மைதானத்தில் ஏற்பட்ட மோதல்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியும், பெங்களூரு அணியும் மோதிக் கொண்டது.
அப்போது, கவுதம் கம்பீருக்கும், கோலிக்கும் இடையே மைதானத்தில் பயங்கரமாக சண்டை ஏற்பட்டது.
விராட் கோலி டக் அவுட்டானதை மைதானத்தில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் மாம்பழங்களுடன் உற்சாகமாக கொண்டாடினார்.
இது கோலியின் ரசிகர்களுக்கு எரிச்சலடைய வைத்தது. அதேபோல், மும்பை அணிக்கு எதிராக லக்னோ விளையாடியது. அந்த ஆட்டத்தில் நவீன் உல் ஹக் 38 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் மைதானத்தில் கே.எல்.ராகுல் போல் காதுகளை கைகளால் மூடி கொண்டாடினார். "சைலன்ஸ்" என்று செய்கை செய்து சிக்கலில் சிக்கினார். இதனால் மும்பை அணி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் உல் ஹக்கை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
மோதலில் ஈடுபட்டது விராட்கோலி தான்
இந்நிலையில், விராட் கோலியுடனான மோதல் குறித்து நவீன் உல் ஹக் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், என் மீது தவறு ஏதுமில்லை. போட்டிக்கு முடிந்த பிறகு இரு அணிகளும் கைக்குலுக்கிக்கொண்டோம். அப்போது, விராட் கோலி தான் சண்டையை தொடங்கினார்.
நடுவர் விதித்த அபராதத்திலிருந்து உங்களுக்குத் தெரியும். நான் யாரையும் ஸ்லெட்ஜிங் செய்யமாட்டேன்.
பெங்களூரு அணி உடனான போட்டியில் வந்து வீசும்போதும் சரி, துடுப்பாட்டம் செய்யும்போதும் சரி நான் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. என் கோபத்தை கூட நான் வெளிப்படுத்தவில்லை.
நான் கைகுலுக்கும்போது விராட் கோலிதான் என் கையை அழுத்தமாக பிடித்து மோதலில் சண்டையை ஏற்படுத்தினார். அதற்கு நான் பதிலடி மட்டும்தான் கொடுத்தேன். நான் மற்ற மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்பவன் என்றார்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு விராட் கோலியின் ரசிகர்களுக்கிடையே கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |