காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி உடலுடன் படுத்துத் தூங்கிய பெண்
மனைவியை சந்திப்பதற்காக ஆசையுடன் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்த ஒருவரை அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற வழக்கில் பயங்கர தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பிய இந்தியர்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப் ராஜ்புத் (Saurabh Rajput, 29), பிரித்தானியாவில் கடற்படையில் சரக்குக் கப்பல்களைக் கையாளும் பணியிலிருந்துள்ளார்.
தனது மகளின் பிறந்தநாளன்று, தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, கடந்த மாதம் 24ஆம் திகதி லண்டனிலிருந்து இந்தியா வந்த ராஜ்புத்தை, அவரது மனைவியான முஸ்கனும் (Muskan, 27) ராஜ்புத்தின் நண்பரான சாஹிலும் (Sahil, 25) சேர்ந்து கொன்றுவிட்டார்கள்.
பயங்கர தகவல்கள்
இந்நிலையில், முஸ்கனையும், சாஹிலையும் குறித்த பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பார்ட்டி ஒன்றில் சந்தித்த இருவருக்கும் தவறான உறவு ஏற்பட, தங்கள் உறவுக்குத் தடையாக ராஜ்புத்தைக் கொன்றுவிட இருவரும் முடிவு செய்துள்ளார்கள்.
அதன்படி, உணவில் மயக்கமருந்துகளைக் கலந்துகொடுத்து, ராஜ்புத் மயங்கியதும், சாஹிலை வரவழைத்துள்ளார் முஸ்கன்.
ராஜ்புத்தை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு எங்காவது கொண்டு வீசிவிட இருவரும் திட்டமிட்டுள்ளார்கள்.
ராஜ்புத்தின் தலையையும் கைகளையும் தன்னுடன் தன் வீட்டுக்குக் கொண்டு சென்றுள்ளார் சாஹில்.
மீதமுள்ள உடல் பாகங்களை தன் கட்டிலுக்குக் கீழே உள்ள ட்ராவில் போட்டு மூடிவைத்து, அந்த கட்டிலில்தான் படுத்துத் தூங்கியுள்ளார் முஸ்கன். மறுநாள், திட்டம் மாறியுள்ளது.
அதன்படி ஒரு பெரிய ட்ரம் வாங்கி அதற்குள் ராஜ்புத்தின் உடல் பாகங்களைப் போட்டு, சிமெண்ட் கலவையால் மூடியுள்ளார்கள் இருவரும்.
ராஜ்புத்தைக் கொன்றுவிட்டு திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்ட முஸ்கனும் சாஹிலும், முதன்முறையாக சிறையில் கடும் அச்சம், பதற்றத்துடன் நாட்களை செலவிட்டுவருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |