புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த கடற்படை: ஆளுங்கட்சி உறுப்பினரின் யோசனை
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த கடற்படையைப் பயன்படுத்தலாம் என பிரித்தானிய ஆளுங்கட்சியான லேபர் கட்சி உறுப்பினர் ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி உறுப்பினரின் யோசனை
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Lord Glasman, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த கடற்படையைப் பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் புலம்பெயர்தல் நிலைமை கைமீறிப்போய்விட்டதாக தெரிவித்துள்ள அவர், நானாக இருந்தால் சிறுபடகுகளை தடுத்து நிறுத்த ஆங்கிலக்கால்வாயில் கடற்படையை களமிறக்கியிருப்பேன் என்று கூறியுள்ளார்.
பிரான்சிலிருந்து வரும் புலம்பெயர்வோரை பிரான்சுக்கே அனுப்பவேண்டும் என்றும் கூறியுள்ள Glasman, இவர்களுக்கு பிரான்சில் வாழ்வதில் என்ன பிரச்சினை, மனித உரிமைகளை பின்பற்றும் பிரான்சை விட்டுவிட்டு இந்த புலம்பெயர்வோர் ஏன் பிரித்தானியாவுக்கு வருகிறார்கள் என்பதுதான் எனது கேள்வி என்கிறார்.
மேலும், ஆங்கிலக்கால்வாய்க்கு ட்ரோன்களை அனுப்பி, திரும்பிச் செல்லுமாறு புலம்பெயர்வோரிடம் கூறலாம் என்றும் கூறியுள்ளார் Glasman.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |