இந்து மதத்தை புண்படுத்தியதாக நயன்தாராவின் திரைப்படம் நீக்கம்: Netflix அதிரடி
இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக பின்னடைப்பெற்ற நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படமானது நெட்ஃப்ளிக்ஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
நயன்தாராவின் அன்னபூரணி
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75 ஆவது திரைப்படமாக அன்னபூரணி வெளியாகியது.
இதில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படமானது கடந்த டிசம்பர் மாதம் 1-ம் திகதி வெளியானது. இதில் நடிகை நயன்தாரா சமையல்காரராக ஆசைப்படும் இந்து பிராமண பெண்ணாக நடித்துள்ளார்.
அவள் தன் குடும்பத்தின் மத நம்பிக்கைகளுக்கு எதிராகச் செல்வதாகவும், இறைச்சியை உண்பதாகவும், சமைக்கக் கற்றுக்கொள்வதாகவும் காட்டப்பட்டுள்ளது.
பிரியாணி சமைப்பதற்கு முன்பு நமாஸ் செய்வது, உட்பட திரைப்படத்தில் உள்ள மற்ற காட்சிகளுக்கும் இந்து அமைப்புகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்துக் கடவுள் ராமர் இறைச்சி சாப்பிட்டார் என்று ஒரு முஸ்லீம் கதாபாத்திரம் கூறும் காட்சியில் இந்துக்கள் கோபமடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதிரடி முடிவெடுத்த Netflix
இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸில் இருந்து திரைப்படமானது நீக்கப்பட்டுள்ளது.
படத்தை இணைந்து தயாரித்த ஜீ நிறுவனம் விஷ்வ இந்து பரிஷர் அமைப்பிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. அக்கடிதத்தில் ’படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை அப்படத்தை நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்குவதாக உறுதியளிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சிலர் நெட்ஃபிளிக்ஸிலிருந்து படம் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகச் சொன்னாலும், மற்றவர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |