கணவருடன் விவாகரத்தா? நடிகை நயன்தாராவின் பதில்
கணவர் விக்னேஷ் சிவனுடன் விவாகரத்து முடிவில் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு நயன்தாரா பதில் அளித்துள்ளார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன்
தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகையான நயன்தாரா, கடந்த 2022ஆம் ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. நட்சத்திர தம்பதி தங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
எதிர்வினை
இந்த நிலையில் சில நாட்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விவாகரத்து முடிவில் இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.
இதற்கு இருவரும் பதில் அளிக்காத சூழலில் தற்போது சமூக வலைத்தளம் மூலம் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
அத்துடன் "எங்களைப் பற்றி வரும் வதந்திகளுக்கு எதிர்வினை இதுதான்" என நகைச்சுவையாக பதிலளித்துள்ளனர்.
இதன்மூலம் இருவரும் தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நயன்தாரா உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |