ஜெய் ஸ்ரீ ராம்... பகிரங்கமாக மன்னிப்பு கோரிய நயன்தாரா!
இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக பின்னடைப்பெற்ற நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படமானது நெட்ஃப்ளிக்ஸில் இருந்து நீக்கப்பட்டு சர்ச்சயை ஏற்படுத்தி வருவதால், நடிகை நயன்தாரா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
அன்னபூரணி
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75 ஆவது திரைப்படமாக அன்னபூரணி வெளியாகியது.
இதில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்திருந்தார்கள்.
இத்திரைப்படமானது கடந்த டிசம்பர் மாதம் 1-ம் திகதி வெளியானது. இதில் நடிகை நயன்தாரா சமையல்காரராக ஆசைப்படும் இந்து பிராமண பெண்ணாக நடித்துள்ளார்.
அதில் தன் குடும்பத்தின் மத நம்பிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதாகவும், இறைச்சியை உண்பதாகவும், சமைக்கக் கற்றுக்கொள்வதாகவும் காட்டப்பட்டுள்ளது.
சர்ச்சை ஏற்பட காரணம்
பிரியாணி சமைப்பதற்கு முன்பு நமாஸ் செய்வது, உட்பட திரைப்படத்தில் உள்ள மற்ற காட்சிகளுக்கும் இந்து அமைப்புகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.
இந்துக் கடவுள் ராமர் இறைச்சி சாப்பிட்டார் என்று ஒரு முஸ்லீம் கதாபாத்திரம் கூறும் காட்சியில் இந்துக்கள் கோபமடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
எனவே நெட்ஃப்ளிக்ஸில் இருந்தும் திரைப்படமானது நீக்கப்பட்டது. தொடர்ந்து இந்த படமானது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே நடிகை நயன்தாரா தனது x தளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மன்னிப்பு கோரிய நயன்தாரா
இந்நிலையில் அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதில், “நானும் எனது குழுவும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டு இந்த திரைப்படத்தை வெளியிடவில்லை. இந்த திரைப்படம் ஒரு சினிமா முயற்சியில் மாத்திரம் உருவாக்கப்படவில்லை. நெகிழ்ச்சியைத் தூண்டு ஒரு படமாக உருவாக்கப்பட்டது.
ஆனால் இது ஓ.டி.டி. தளத்தில் இருந்து அகற்றப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
Spread Positivity ?God Bless? pic.twitter.com/vFj6JHdzGp
— Nayanthara✨ (@NayantharaU) January 18, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |