போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய சொகுசு பங்களாவின் விலை இத்தனை கோடியா! தீயாய் பரவும் தகவல்
நடிகை நயன்தாரா சமீபத்தில் வாங்கிய வீட்டின் விலை குறித்து இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா. இவர் அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பல இளஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி வசூலை அள்ளியது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் சொந்தமாக வீடு வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது.

அதாவது நயன்தாரா போயஸ் கார்டனில் இரு வீடுகளை வாங்கியுள்ளதாகவும், இரண்டுமே 4BHK வீடு என்று கூறப்படுகிறது.
 ஒரு வீட்டிற்கு ரூ.18 கோடி என்ற விதத்தில் மொத்தம் ரூ.36 கோடி கொடுத்து இரண்டு வீடுகளை வாங்கியுள்ளதாக இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.     
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        