நடிகை நயன்தாராவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா?
நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா 20 ஆண்டுகளாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.
தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தமிழ், தெலுங்க, மலையாளம் என 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் நயன்தாரா இருக்கிறார்.
தனது நடிப்புத்திறமைக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது, நந்தி விருது என பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
மேலும் ஹீரோயினை மையப்படுத்தி வெளியான ஐரா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், அறம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என்ற 2 இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கும் அவருக்கு 200 கோடி ரூபாய்வரை மொத்த சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் மும்பையிலும் ஒரு ஆடம்பர பங்களாவை வாங்கியிருக்கிறாராம்.
சினிமா மட்டுமின்றி அழகு சாதன தொழில், லிப் பாம் கம்பெனி, நாப்கின் கம்பெனி உள்ளிட்டவைகளை செய்துவரும் அவருக்கு அதிலிருந்தும் ஏகப்பட்ட வருமானம் கொட்டுகிறதாம்.
அவரிடம் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Mercedes gls 350 d காரும், பிஎம்டபிள்யூ 5 உள்ளிட்ட சொகுசு காரும், தனியாக ஜெட் விமானம் ஒன்றையும் வைத்திருக்கிறார்.
முன்னதாக இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாரா பற்றிய ஆவண படம் ஒன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |