நயன்தாராவின் 42-வது பிறந்தநாள்: சொத்து மதிப்பு விவரங்கள்
பிரபல நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடும், பிரபல நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
23 ஆண்டுகால திரைவாழ்க்கை
2003-ஆம் ஆண்டு திரையுலகில் காலடியெடுத்து வைத்த நடிகை நயன்தாரா இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மலையாளத் திரையுலகில் அறிமுகமான நயன்தாரா, தற்போது இந்தியத் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் செல்வாக்கு மிக்க நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடிக்கும் நயன்தாரா, ஒரு திரைப்படத்திற்கு ரூ.5 முதல் ரூ.10 கோடி ரூபாய் வரை ஊதியமாகப் பெறுகிறார்.
இந்தியில் சல்மான் கானுடன் இணைந்து நடிக்கவிருக்கும் நயன்தாரா, அப்படத்திற்காக ரூ.10 கோடியை ஊதியமாக பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
நயன்தாராவின் சொத்துமதிப்பு
பல ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, விளம்பரங்கள், படத்தயாரிப்பு என சில துறைகளில் வருமானம் ஈட்டி வருகிறார்.
தனது திரைப்படங்கள் மூலம் கிடைக்கும் வருவாய், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என அனைத்தையும் உள்ளடக்கி சுமார் 200 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

திரைப்படத் தயாரிப்பு மற்றும் வணிக முதலீடுகள்
நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மதிப்பு சுமார் ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது.
2023-ஆம் ஆண்டில், விக்னேஷ் சிவன் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்முனைவோரான டெய்சி ஷா ஆகியோருடன் இணைந்து, சருமப் பராமரிப்பு சார்ந்த வணிகம் ஒன்றைத் தொடங்கினார்.

நிகர மதிப்பு (சொத்துக்கள்)
NDTV-யின் அறிக்கையின்படி, நயன்தாராவிற்கு சென்னை மற்றும் மும்பையில் சொத்துக்கள் உள்ளன. மேலும், ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பும் ரூ.30 கோடி மதிப்புடையது என்று கூறப்படுகிறது. நயன்தாராவின் கார் சேகரிப்பில் ரூ.3 கோடி முதல் ரூ.10 கோடி வரை கார்கள் உள்ளன.
அவற்றில் மெர்ஸிடிஸ் மேபேக், மெர்ஸிடிஸ்-பென்ஸ் மேபேக் GLS600, ரோல்ஸ்-ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்டர் மற்றும் பல அடங்கும் என்று கூறப்படுகிறது.
