நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவகாரம்!நெட்டிசன்களுக்கு கொடுத்த பதிலடி: அதிகாரப்பூர்வ விளக்கம்
பிரபல நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? இல்லையா? என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் நிலையில், அதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது பரவல் தீவிரமாக பரவி வருவதால், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறது.
அதன் படி திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள் என பலர் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். அவர்கள் பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா நேற்று தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவிற்கான முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அந்த புகைப்படத்தில், நயன்தாராவிற்கு ஊசி போடும் போது ஊசி எதுவும் காணப்படவில்லை, இதுவும் ஒரு நடிப்பா என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்ய ஆரம்பத்தினர்.
ஆரம்பத்தில் சாதரணமாக எடுத்துக் கொள்ளப்பட்ட இது, வேற லெவலில் வைரலானது. தற்போது நயன்தாராவின் அதிகாரப்பூர்வ குழு, நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்ட போது, ஊசி அதாவது சிரிஞ்ச் இருப்பதை தெளிவுபடுத்தியுள்ளது. புகைப்படத்தை சற்று உற்றுப் பார்த்தால், அதை கவனிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
Official: Team #Nayanthara clarifies that there is indeed an injection/syringe in the Covid Vaccine pic.. pic.twitter.com/C7TNvKIPcB
— Ramesh Bala (@rameshlaus) May 19, 2021