முதல்முறையாக குழந்தைகளின் முகம்: இன்ஸ்டா உலகிற்கு வந்த நயன்தாரா
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் மகன்களின் முழுப்புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகின்றது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர்.
திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என அவர்கள் விளக்கம் தெரிவித்து, தற்போது மகன்களை வளர்த்து வருகின்றார்கள்.
சமூக வலைதளங்களில் குழந்தைகள் குறித்து பதிவிடும்போதெல்லாம் அவர்களை உயிர் மற்றும் உலகம் என்றே விக்னேஷ் சிவன் குறிப்பிடுவார்.
நயன்தாரா தனது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தன் இரண்டு மகன்களுக்கும் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரின் முகமும் ஒரு நாளும் வெளிவராமல் இருந்த நிலையில், இன்று நயன்தாரா instagram ஒன்றை திறந்து மகன்களுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.