நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? அவரே கூறிய தகவல்
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நீண்ட வருடங்களாகக் காதலித்து வரும் நிலையில் தற்போது இவருக்கு நிச்சியதார்த்தம் நடந்து விட்டதாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில், கையில் அணிந்துள்ள மோதிரம் வைரலானது குறித்துக் கேட்டதற்கு, தனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டதற்கான மோதிரம் என்று குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.
இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றது. இதற்கு பல ரசிகர்கள் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். சிலர் ரகசிய திருமணமாக என்று கூட பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனிடம் பிடித்த விஷயங்கள் குறித்த கேள்விக்கு, தனக்கு அனைத்துமே பிடிக்கும், பிடிக்காத விஷயங்களும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.