நயன்தாராவின் அடுத்த பிசினஸ்.., கோயம்புத்தூர் கம்பெனியில் முதலீடு செய்த தம்பதியினர்
கோவை ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் முதலீடு செய்துள்ளனர்.
தற்போதைய காலத்தில் நடிகைகள் பலரும் உணவு பிசினஸ், ஆடை பிசினஸ் என்று பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
நயன்தாரா முதலீடு
அந்தவகையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ஃபெமி 9 (Femi 9) என்ற நாப்கின் பிசினஸ் மற்றும் 9 ஸ்கின் (9 Skin) என்ற ஸ்கின்கேர் பிரான்ட (skincare brand) ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் நிறுவனமான Ticket9 -ல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் முதலீடு செய்துள்ளனர்.
இவர்களின் முதலீடு எங்கள் நிறுவனத்தின் மைல்கல் என்றும், எங்களின் பார்வை மீதான இவர்களின் நம்பிக்கையானது அர்ப்பணிப்புடன் வேலை செய்வதற்கு வலுப்படுத்துகிறது என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் ஆதரவால் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் சந்தையை விரிவுபடுத்தவுள்ளோம் என்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி (Event Management Company) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், "Ticket9 நிறுவனமானது நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் துடிப்பாக செயல்படுகிறது. இது யூனிகார்ன் நிறுவனமாக வளரும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |