நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாராவும், நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக தமிழ் திரையுலகில் காதலர்களாக வலம் வருகின்றனர்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம் நடந்ததாக நயன்தாராவே ஒரு போட்டியில் கூறியிருந்தார்.
இதையடுத்து ரசிகர்கள் இவர்களது திருமணம் குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்தநிலையில் சமீபத்தில் தான் இவர்கள் திருமணம் திருப்பதி கோயில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் திருமண விழாவிற்கு 150 க்கு மேற்பட்ட விருந்தினர்கள் வரவுள்ளதால், கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது அவர்கள் திருமண அழைப்பிதழ் லீக் ஆகி உள்ளது. அதில் ஜூன் 9ம் திகதி மகாபலிபுரத்தில் தான் திருமணம் நடக்கிறது என குறிப்பிட்டு இருக்கின்றனர்.
இந்த திருமண நிகழ்வை பிரபல ஓடிடி தளம் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.