நயன்தாராவிடம் இதுதான் பிடிக்கும்! திருமண ஆவணப்படத்தில் பேசிய விக்னேஷ் சிவன்... வீடியோ காட்சி
*நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
*இந்த ஜோடியின் காதல் கதை மற்றும் திருமணத்தின் காட்சிகள் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக இடம்பிடித்துள்ளது.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்கள் காதல் கதையை நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான பியோண்ட் தி ஃபேரிடேல் மூலம் பகிர்ந்து கொள்ளும் நிலையில் அதன் முன்னோட்ட விளம்பர வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடியின் காதல் கதை மற்றும் திருமணத்தின் காட்சிகள் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது.
பியோண்ட் தி ஃபேரிடேல் (Beyond The Fairytale) என்ற தலைப்பில் உள்ள இந்த திருமண ஆவணப்படத்தை பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Cue the malems cos we're ready to dance in excitement?
— Netflix India South (@Netflix_INSouth) August 9, 2022
Nayanthara: Beyond the Fairytale is coming soon to Netflix! pic.twitter.com/JeupZBy9eG
இந்த நிலையில் இந்த ஆவணப்படத்தின் முன்னோட்ட விளம்பர வீடியோவை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. ப்ரோமோவில், தம்பதிகள் ஒருவருக்கொருவர் என்ன விரும்புகிறார்கள் மற்றும் தங்களின் விருப்பு வெறுப்புகள் பற்றி பேசுகின்றனர்.
நயன்தாரா பேசுகையில், வேலை செய்வதை மட்டுமே நான் நம்புவேன். நம்மை சுற்றி இவ்வளவு அன்பு இருப்பதை பார்க்கும் போது நன்றாக உள்ளது என கூறினார்.
நயன்தாராவிடம் பிடித்தது பற்றி விக்னேஷ் சிவன் பேசுகையில், ஒரு பெண்ணாக நான் அவருடைய இயல்பை விரும்புகிறேன் என கூறியுள்ளார்.