உலகப்புகழ் பெற்ற திரைப்பட காட்சியை பிரதிபலித்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்!
ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் இடம்பெறும் திருமண காட்சியைப் போல, நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சென்னை மகாபலிபுரத்தில் நட்சத்திர ஜோடி நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் செய்த திருமண ஏற்பாட்டின் ஒரு பகுதி, ஹாலிவுட் திரைப்பட காட்சியை பிரதிபலித்தது.
2018ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'Crazy Rich Asians'. இந்த படம் இடம்பெற்ற அழகிய திருமண காட்சி ஒன்று பல்வேறு ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டது.
அதாவது ஒரு தாழ்வான நெல் வயலைப் போல உருவாக்கப்பட்ட இடைக்கழியில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். அதன் மேலே மணமகள் நடந்துவருவது போல் அந்த காட்சி உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்த கட்சியை அப்படியே பிரதிபலிக்கும் வகையில், அதே போல் ஏற்பாடு செய்யப்பட்டு மணமகள் நயன்தாரா மற்றும் மணமகன் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் நடந்து வந்தார்கள். நட்சத்திர ஜோடியின் இந்த அழகிய திருமண ஏற்பாடு காண்போரை வெகுவாக கவர்ந்தது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        